இலங்கையில் பசளை உற்பத்திக்கான நடவடிக்கை முன்னெடுப்பு: மஹிந்த அமரவீர
இலங்கையில் இரண்டு வகையான பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எப்பாவல பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
பசளை தயாரிப்பு
கடந்த 1979ம் ஆண்டு தொடக்கம் எப்பாவல பொஸ்பேட் படிமம் பயன்படுத்தப்படாமல் வெறுமனே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் அண்ணளவாக 60 மில்லியன் தொன் பசளை தயாரித்துக் கொள்ள முடியும்.
எனவே பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைக்கு இந்தப் பசளை வகைகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றது.
எந்தவொரு முதலீட்டாளரும் அதற்காக முதலீடு செய்வதற்கு முன்வரலாம். தற்போதைக்கு சிலர் முன்வந்துள்ளார்கள்.
எனினும் அவர்களின் உற்பத்தித்திறன் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக குறைந்த பட்சம் 20 மில்லியன் டொலர் வைப்பொன்றை அவர்கள் வைப்பிலிட வேண்டும் என்றும் அமைச்சர் அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை |