சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை

இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு பயணம் செய்யுமாறு கோரியுள்ளார்.
கோரிக்கை

கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் நீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam