மீண்டும் எம்.சீ.சீ உடன்படிக்கை:இலங்கை வரும் அமெரிக்காவின் பிரதிநிதி
அமெரிக்காவின் மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கைக்கு அமைய அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமெரிக்க பிரதிநிதி ஒருவர் இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
நேபாளம் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. நேபாளம் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான தலையீடுகள மேற்கொண்ட நபரே தற்போது இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படவிருந்தனர். அதற்கு நாட்டில் மக்களின் எதிர்ப்பு ஏற்பட்டதால், அதனை செய்ய முடியவில்லை. இலங்கையின் தற்போதைய அரசாங்கம், அமெரிக்காவுக்கு ஆதரவான அரசாங்கம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
