ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே
பிரான்ஸின்(France) கால்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே(Kylian Mbappé) 2024 - 2025க்கான ஐரோப்பிய கிண்ண தொடருக்கு ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நடைபெறவுள்ள தொடரில் ரியல் மாட்ரிட் சார்பாக அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிஸ் செயின்ட் - ஜெர்மைன் கழகத்துக்காக நடப்பு தொடரில் விளையாடிய அவரின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
கடந்த மாதம் பரிஸ் செயின்ட் - ஜெர்மைன் கழகத்தை விட்டு தான் விலகுவதாக அறிவித்த அவரின் கருத்தானது பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் வாரம் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை பிரான்ஸுக்காக வென்றுக்கொடுத்த எம்பாப்பே, இளவயது கால்பந்து சாதனையாளர் எனவும் வர்ணிக்கப்படுகின்றார்.
அவர் 2029 ஆம் ஆண்டு வரை ரியல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ள நிலையில் , ஒரு தொடருக்கு 15 மில்லியன் யூரோக்கள் இலங்கை பெறுமதி 4.9பில்லியனுக்கும் அதிக தொகை) வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் 150 மில்லியன் யூரோ கையொப்பமிடுதளுக்கு மேலதிக ஒப்பந்த தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. கிலியன் எம்பாப்பே தனது 19 ஆவது வயதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர் ஆவார்.
அத்துடன், தனது 23ஆவது வயதில் உலகக்கோப்பையில் கோல்டன் பூட் விருதை தன்வசப்படுத்தியிருந்தார்.
1966 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் தன்வசம் கொண்டுள்ளார்.
பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே 14 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி மொத்தம் 12 கோல்கள் அடித்துள்ள நிலையில் அதனை தனது இளம்வயதிலேயே எம்பாப்பே சமன் செய்துள்ளார்.
கிலியன் எம்பாப்பேவுடன் ஒப்பந்தம்
கட்டாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையிலான இறுதிப் போட்டியை வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியதில் கிலியன் எம்பாப்பேவிற்கு மிக முக்கிய பங்குண்டு.
2015ஆம் ஆண்டில் தனது 16 வயதில் Monaco கலகத்துக்காக விளையாடிய இவரது திறமையை கண்ட Monaco அணி 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது.
இவரது கோல் மழை Monaco அணியை பிரான்ஸின் உள்ளக தொடரான லீக் 1 கோப்பையை வெல்ல உதவியது. இதற்கிடையில் பிரான்ஸ் தேசிய அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார்.
படிப்படியாக தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்த அவர் பிரான்ஸ் தேசிய அணியில் 2017ஆம் ஆண்டு முதல்முறை விளையாடினார். மறுபுறம் லீக் 1 விளையாடும் முன்னணி கழகமான பி.எஸ்.ஜியில் விளையாடும் வாய்ப்பு எம்பாப்பேவிற்கு கிடைத்தது.
இந்த அணியில் ஆடி ஐரோப்பிய கழகங்களுக்கு எதிரான போட்டியில் கோல்களை அடித்து அசத்தியமை அவரது திறமையை மேலும் உலகறிய செய்திருந்தது.
இந்த சூழலில் 2018 ஆம் ஆண்டு ரஷ்ய உலகக்கோப்பை தொடருக்கான பிரான்ஸ் அணியில் இடம்பிடித்தார்.
இந்த தொடரில் முதல் கோல், ஒரே போட்டியில் இரண்டு கோல், Man of the Match விருது, இறுதிப் போட்டியில் கோல், Best Young Player விருது என வரிசையாக சாதனைகளை தன்வசப்படுத்திக்கொண்டே சென்றார்.
ஒரு கட்டத்தில் உலகின் மிகப்பெரிய கால்பந்து கழகங்களாக விளங்கும் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முஞ்ச், லிவர்பூல் என பலரும் கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தனர்.
இந்நிலையில் பிரான்ஸின் முன்னணி கழகமான பி.எஸ்.ஜி அணி கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்து தங்கள் அணி வீரராகவே மாற்றியமைத்தது.
தற்போது லீக் 1, சாம்பியன்ஸ் லீக், UEFA தொடர் , பிரான்ஸ் தேசிய அணி, கோபா டி பிரான்ஸ், உலகக்கோப்பை என அனைத்திலும் அற்புதமாக கோல்களை அடித்து உலக அரங்கை தன்பக்கம் திருப்பியுள்ளார்.
இதேவேளை, எம்பாப்பே சிறு வயது முதலே ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |