கொழும்பு நகரின் 15 இடங்களில் மே தினக்கூட்டங்கள்
கொழும்பு நகரின் 15 இடங்களில் இன்றைய தினம் மே தினக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினமான மேதினம் இன்றாகும். இலங்கையில் மே தினம் சம்பிரதாயபூர்வமாக அனுஷ்டிக்கப்படத் தொடங்கி 139 வருடங்கள் இன்று பூர்த்தியாகின்றது.
கடந்த 1956ம் ஆண்டு பதவிக்கு வந்த பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமே இலங்கையில் மே தின நிகழ்வுகளுக்கு முதன்முதலாக அரச அனுசரணை வழங்கியதுடன், மே தினத்தை விடுமுறை தினமாகவும் அறிவித்தது.
தொழிலாளர் அமைப்பு
ஆரம்ப காலங்களில் தொழிலாளர் அமைப்புகளால் கொண்டாடப்பட்ட மே தின நிகழ்வுகள் தற்போது அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டின் மேதின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பில் 15 இடங்களில் மேதின கூட்டங்கள், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொழும்புக்கு வெளியிலும் ஒருசில அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.