தலைமன்னார் கிராம மக்களின் மே தின விழா
தலைமன்னார் - ஊர்மனை கிராம மக்கள் மே தின விழாவானது புனித லோறன்சியார் ஆலய பங்குத்தந்தை தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அக் கிராம மக்கள் இன்றைய தினம் (02.05.20024) மே தினத்தை ஒன்று திரண்டு மிகவும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.
விளையாட்டு நிகழ்வுகள்
மேலும், ஊர்மனை கிராமத்தின் புனித லோறன்சியார் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் லோறன்சியார் விளையாட்டு கழகம் கூட்டாக இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, கிராம மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதுடன் அனைவரும் ஒன்று திரண்டு கடற்றொழில் துறைமுகத்தில் போட்டி நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
இதற்காக, நீச்சல் போட்டி, தெப்பம் வலிக்கும் போட்டி, பெரிய மற்றும் சிறிய படகுகளின் போட்டி மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றன.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் தரப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |