பிரித்தானியாவில் தலைமறைவான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீது அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவிலிருந்து (United Kingdom) நாடுகடத்தப்பட்ட இருக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை, அவர்களது வீடுகளுக்கு சென்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய அரசின் ருவாண்டா திட்டத்தின் கீழ், முதல் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் குழுவினர் கடந்த திங்கட்கிழமை (29) மாலை ருவாண்டாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து, தாங்களும் நாடுகடத்தப்படலாம் என்னும் அச்சத்தில், ஆயிரக்கணக்கான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் தலைமறைவாகியிருக்கலாம் என்னும் செய்திகள் வெளியாகின.
எனவே, நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க, புலம்பெயர்ந்தோர் தலைமறைவாவதைத் தடுப்பதற்காக, நேற்று (01) முதல் நாடு முழுவதும் எல்லை பாதுகாப்புப் பொலிஸார் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் வீடு வீடாகச் சென்று சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கைது செய்து பொலிஸ் வான்களில் ஏற்றும் காட்சிகளை பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
BREAKING: The first people set to be removed to Rwanda have been detained. pic.twitter.com/2WWNhQVC1l
— Home Office (@ukhomeoffice) May 1, 2024
இதன்போது கைது செய்யப்படும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் எதிர்வரும் ஜூலை மாதம் முதல், ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |