ஸ்டாலின் தலைமையில் தமிழக ஆட்சி! தமிழினம் விடுதலை பெறும் வாய்ப்பு ஏற்படும் - மாவை நம்பிக்கை
திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அந்த கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து மாவை சோ.சேனாதிராசா வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்தியில் மேலும்,
தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான்.
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்.
திராவிட இயக்கத் தலைவர் தமிழ் நாட்டு மக்கள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கொள்கை வழி நின்று எதிர்காலத்திலும் தலைவர், தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் வெற்றிக்கும் உழைத்திட இலங்கைத் தமிழர் தரப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், வெற்றி பெறவைத்த மக்களுக்கும் எம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தளபதி ஸ்டாலினின் வெற்றி இலங்கை தமிழரின் விடுதலைக்கு பேராதரவை உருவாக்கும்
— Mavai Senathirajah (@Mavai_S) May 2, 2021
திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சி, எம் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம். @mkstalin @arivalayam @Udhaystalin





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
