மாவீரர்களை நினைவேந்த உணர்வுபூர்வமாக தயாராகிறது தாயக மண்
உரிமை கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த வடக்கு - கிழக்கு தாயக மண் தயாராகி வருகின்றது.
தாயக பூமி எங்கும், சிவப்பு - மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை நினைவுகூரும் அந்த உணர்வுபூர்வ தருணத்திற்காக தாயக சொந்தங்கள் தயாராகி வருகின்றனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயகம் மாத்திரமின்றி ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.
தங்களது உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போன தமது மாவீரர்களை நினைத்து, இன்று மாலை 06.05இற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிக்கப்படும்.
“தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற பாடல் ஒலிக்கும் நேரம் கண்ணீர் ததும்ப அனைவரும் வீர மரணம் அடைந்த தமது வீரர்களை, உறவுகளை எண்ணி உணர்வு பூர்வ அஞ்சலிகளை செலுத்துவர்.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri