வடக்கில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு அரசின் இயலாமையை காட்டுகின்றது: சரத் வீரசேகர
வடக்கில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கு அரசாங்கம் அனுமதித்தமை அரசின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

நிறம் காட்சிப்படுத்தல்
இரு நாட்கள் பிரதேசம் எங்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகின்றன. இதற்கு பிரதேச வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்நாட்டில் தனி இராச்சியத்திற்காக போராடியவர்கள்.மேலும் பல ஆயிரம் மக்களை அழித்தவர்கள் இன்று வீரர்களாக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மன் நாசிகள்
யுத்தத்தில் இறந்தவர்களை நினை கூருவது தப்பில்லை.ஆனால் ஒரு குழுவாக பெரும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமை ஏற்கொள்ள முடியாதது. ஜேர்மன் நாசிகளை நினைவு கூருவதற்கு இன்றும் அனுமதிப்பதில்லை.
அதேபோல அமெரிக்கா அல்கைடா பயங்கரவாதிகளை நினைவு கூற அனுமதிக்குமா? என அரசிடம் கேட்கிறோம். ஒரு பயங்கரவாத யுத்தம் முறியடிக்கப்பட்ட பின்னர் அது மீள உருவெடுக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் அதில் பின்வாங்கியுள்ளதாகவே தோன்றுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.