இயற்கை பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலிக்க தயாராகும் தமிழர் தேசம்
தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை தமிழர்கள் அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள் இன்றாகும்.
கொட்டும் மழை மற்றும் பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலை இன்று மாலை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க தமிழர் தாயகம் தயாராக உள்ளது.
தமிழினத்தின் இருப்புக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூரும் நாள்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலும் இல்லங்கள்
இதற்கமைய, வீதிகள் எங்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் இம்முறை சுமார் 30 மாவீரர் துயிலும் இல்லங்களில் பிரதானமாக அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதனை தவிர, தனி மாவீரர் நினைவிடங்கள், உள்ளூராட்சி சபைகள், அரசியல் கட்சிகளின் பணிமனைகள் மற்றும் தனிநபர்களால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிக்க ஏற்பாடாகியுள்ளது.

சிவப்பு, மஞ்சள் வர்ணக்கொடிகளால் அலங்கரிப்பு
இந்த வருடம் வழக்கத்திலும் பார்க்க அதிகளவான இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள் ஏற்பாடாகியுள்ள அதேசமயம், தமிழர் தாயகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் பலவும் சிவப்பு, மஞ்சள் வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாவீரரை நினைவேந்தும் பதாகைகள், பொதுச் சின்னங்கள் என்பவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர புலம்பெயர் தேசங்களிலும் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று வழமை போன்று மாலை 6.05 மணிக்குத் துயிலும் இல்லங்கள், நினைவாலயங்கள், பொது இடங்கள், வீடுகளில் சமநேரத்தில் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்) உயிர்நீத்த (1982) நவம்பர் 27ஆம் நாளில் அந்த அமைப்பின் சார்பில் மாவீரர்களானவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள்.
1989ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட நிகழ்வாக மாவீரர் நாள் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க Cineulagam