முல்லைத்தீவு பொலிஸாரின் கெடுபிடிகள்: சிவப்பு மஞ்சள் கொடிகளை பறித்து அராஜகம் (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல துயிலும் இல்லங்களின் மாவீரர் நாள் எழுச்சி செயற்பாடுகளை குழப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டியுள்ளார்கள்.
பலரது பெயர் விவரங்களை தாங்கி நீதிமன்ற தடை உத்தரவினை கையில் கொடுத்தும் சிவப்பு மஞ்சள் கொடி கட்ட கூட பெயர் பொறிக்க கூட கார்த்திகைப் பூ பதிக்க கூட என்ற செயற்பாடுகளில் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்வோம் என்று மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நீதிமன்ற தடை
முள்ளிவாய்க்கால் பகுதியில் சமூக செயற்பாட்டாளய் ஒருவர் வீட்டில் பையில் போட்டு வைத்திருந்த சிகப்பு மஞ்சள் கொடிகளை பொலிஸார் நேற்று எடுத்துச் சென்றுள்ளார்கள்.
மாத்தளன் பகுதி முள்ளிவாய்க்கால் மேற்கு, இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் ,முல்லைத் தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொலிஸார் அங்கு ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
பதாதைகளில் கார்த்திகை பூவினை அகற்றுமாறு கோரி நிக்கும் பொலிஸார் அதன் நீதிமன்ற தடையினை காட்ட மறுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மடவாகன சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்டவர்கள் பொலிஸாருடன் உரிமையினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
மேலும், அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப பகுதியிலும் நேற்று மாலை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத்தினுடைய கட்டளைகளை வழங்கி அங்கு கட்டப்பட்டிருக்கின்ற சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது அதனை அகற்ற முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர் இவ்வாறான பின்னணியில் பொலிஸார் திரும்பி சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் வழமை போன்று குறித்த சாள்ஸ் மண்டப பகுதியிலே இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசனை பாராட்டும் பௌத்த பிக்கு - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |