கேகாலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயம்
கேகாலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (03.09.2023) காலை கேகாலை, மாவனெல்லை - எருவ்பொல வீதியின் எத்தமிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் காயமடைந்த இளைஞர் அரநாயக்க லீலாகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அசுபினி எல்ல நீர் திட்டத்தின் கீழ், எரவ்பொல வரை நீர் வழங்குவதற்காக அந்த வீதியில் வடிகாண்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற வடிகாண் காரணமாக வீதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டமையும் விபத்துக்கு காரணமாக அமைந்திருக்களாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
