மாவை சேனாதிராஜாவின் மறைவு இலங்கைத் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு: கே.அண்ணாமலை
இலங்கைத் தமிழர்களின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான, மாவை சேனாதிராஜாவின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று பாரதீய ஜனதாக்கட்சியின், தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை(K.Annamalai) தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜாவின்(Mavai Senathirajah) மறைவையொட்டி கே. அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவையின் மறைவு
குறித்த செய்தியில்,
“அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
தமிழக மக்கள் மீது பெரும் அன்பு கொண்டவர். இலங்கை தமிழ் மக்கள் நல்வாழ்வுக்காக, நமது மத்திய அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் தொடர்பாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
மாவை சேனாதிராஜாவின் மறைவு, இலங்கைத் தமிழ் மக்களுக்கும், தனிப்பட்ட முறையில், எனக்கும் பேரிழப்பு.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |