தமிழ் தேசியத்தின் அடையாளம் மாவை! மனோ இரங்கல்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறப்பிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன் தனது இரங்கல் செய்தியில், சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், முன்னாள் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்.
நீண்ட கால பயணம்
மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக சாலையில் பயணித்த, மாவை சேனாதிராஜா என்ற தமிழ் தேசிய வாகனம் நின்று விட்ட சம்பவம் இன்று நிகழ்ந்தே விட்டது.

பல உணர்வு மிக்க தரிப்பிடங்களையும், கடவைகளையும், தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுடன் நான் கடந்து வந்துள்ளேன். இதிலேயே அண்ணன் மாவையுடன் மிக நீண்ட காலமாக நான் பயணித்தும் உள்ளேன்.
இன்றைய இந்த சோகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்கு கொள்கிறோம். எங்கள் அனுதாபங்களை அவரை இழந்து வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவரது கட்சிக்கும், மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam