உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் : ஒத்திவைக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு
2023ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதியரசர்கள் தீர்ப்பு
இந்நிலையில் வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததையடுத்து மனுக்களின் விசாரணையை முடித்த நீதியரசர்கள் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் சுதந்திரமான மற்றும் பெப்ரல் என்ற நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை உள்ளிட்ட பல குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
