டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் : இந்திய மத்திய அரசு வெளியிட்ட தகவல்
டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத செயல் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இன்று(12.11.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரவையில் தீர்மானம்
தேச விரோத சக்திகள் கார் மூலமாக வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
Government of India officially declares Red Fort blast in Delhi a 'TERRORIST INCIDENT'
— Shivank Mishra (@shivank_8mishra) November 12, 2025
Ashwini Vaishnav said Cabinet express profound grief to the loss of lives in the terrorist incident involving a car explosion at Red Fort in Delhi in the evening of 10th November 2025. pic.twitter.com/9Egg1VJwQ2
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது.
அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்ததுடன், கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த கார் வெடிவிபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததுடன், 13 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam