கெஹல்பத்ர பத்மே வழங்கிய வாக்குமூலம்! போலி உருவப்படத்தால் ஏமாற்றப்பட்ட நடிகை
கெஹல்பத்ர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றபுலனாய்வு திணைக்களத்திந்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, நாட்டின் பிரபல நடிகை ஒருவரிடமிருந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், குறித்த நடிகையும் கெஹல்பத்தர பத்மேவும் துபாயில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் சந்தித்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக பத்மே குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, பத்மே, தன்னை துபாயைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் என்று குறித்த நடிகைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் அவரது போலி உருவப்படத்தால் ஏமாற்றப்பட்டு இந்த படத்திற்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam