மத்திய முகாம் வைத்தியசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மகப்பேற்று விடுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில், CIC விவசாய வர்த்தக நிறுவனத்தின் சமூக நலத் திட்டத்தினூடாக திருத்தி அமைக்கப்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி, உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நேற்று(21.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் இசுறு கொடிக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன் மற்றும் CIC வர்த்தக நிறுவன பணிப்பாளர் வரூண மதவன ஆராச்சி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு விடுதியினைத் திறந்து வைத்துள்ளனர்.
மக்கள் பாவணைக்கு கையளிப்பு
மிக நீண்டகாலமாக சேதமடைந்து, கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழமையான விடுதிக் கட்டிடம், CIC நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத்துறையினர், அரச நிறுவனங்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரினதும் முழுமையான ஒத்துழைப்புடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன், கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள், நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் குறித்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

