ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் (SLC) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகடெமான்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி உத்தரவு
அந்த தகவலின்படி,முன்னாள் ரோகல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன இடைக்கால குழுவின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, சில்வா விரைவில் பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான International Cricket Council-க்கு இந்த மாற்றம் உள்நாட்டு விடயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஷம்மி சில்வாவின் பதவி
அதே நேரத்தில், கடந்த காலத்தில் SLC நிர்வாகம் தொடர்பாக நிதி முறைகேடு, உறவினர்பாகுபாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. பல விசாரணை அறிக்கைகளும் நிர்வாக மாற்றத்தை பரிந்துரைத்திருந்தன.

இந்நிலையில், ஷம்மி சில்வா பதவி விலகிய பின்னர் அவருக்கு எதிரான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.
அதேவேளை, வெளிப்படையாக பதில் அளிக்கும் முன் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்தவிடயங்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தரப்போ, ஜனாதிபதி தரப்போ எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam