142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்கிய இலங்கை மத்திய வங்கி
கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 142 மில்லியன் பணத் தாள்களை புழக்கத்தில் இருந்து மத்திய வங்கி நீக்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நிதி அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அறிக்கைக்கமைய, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு நீக்கப்பட்ட 141.55 மில்லியன் பணத் தாள்களின் மொத்த மதிப்பு 91.23 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
பொருத்தமற்ற பணத்தாள்கள்
சிதைந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பணத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகளைத் தொடர்ந்து புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

அவற்றுக்கு பதிலாக புதிய பணத்தை விநியோகிக்கும் முறையான பணியை மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கள்ள பணத்தாள்களின் புழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நோட்டுக்கள் பிரிவுடன் இணைந்து மத்திய வங்கி செயற்பட்டு வருகிறது.
நாணயப் பரிமாற்றக் கவுண்டர்கள்
அதற்கமைய, கடந்தாண்டில் போலி நாணயத்தாள்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிப்பதற்கான 83 சான்றிதழ்களை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான 13 நீதிமன்ற வழக்குகளிலும் பங்கேற்றுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் மத்திய வங்கியின் நாணயப் பரிமாற்றக் கவுண்டர்கள் ஊடாக 1,139 மில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்களும், 11.84 மில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளும், 196.46 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிதைந்த பணத்தாள்களும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan