மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்

Matara North Korea Gun Shooting
By Dhayani Jan 22, 2024 04:46 AM GMT
Report

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற 22 வயதுடைய இளைஞன் துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிந்திக அளுத்கம என்ற இளைஞன் மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மூத்த சகோதரர் விமானப்படை அதிகாரி எனவும் மற்றுமொரு சகோதரர் கொரியாவில் பணிபுரிவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்கு கிடைக்கவுள்ள பலன்கள்: சாகல உறுதி

மக்களுக்கு கிடைக்கவுள்ள பலன்கள்: சாகல உறுதி

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல் | Matara Gun Shoot Investigation

கொரிய வேலைவாய்ப்பு

மிந்திக அளுத்கம கொரிய வேலைவாய்ப்பிற்காக இன்னும் சில நாட்களில் கொரியாவிற்கு செல்லவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடுகாவ பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மிந்திக தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

கடையின் உரிமையாளரான உயிரிழந்தவரின் நண்பர் தொலைபேசி அழைப்பிற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல் | Matara Gun Shoot Investigation

இந்த கடையின் உரிமையாளர் பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் இருந்து 21 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்

வெள்ளவத்தையில் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்


அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை தாக்கியதாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவைத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், நீதவானின் விசாரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அவரை பொலிஸ் காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல் | Matara Gun Shoot Investigation

கைது நடவடிக்கை

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இலக்கத் தகடுகளின்றி, தலைக்கவசங்களுடன் மாத்தறையில் சதுப்பு நிலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

தென்னிலங்கையில் பதற்றம் : அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் பதற்றம் : அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை



நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US