உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல்

Sri Lanka Bomb Blast Vavuniya Janatha Vimukthi Peramuna Tilvin silva
By Rakesh Apr 06, 2026 07:30 AM GMT
Report

"உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், 'பிரதான சூத்திரதாரி யார்?' என்பது பற்றி நூல் வெளியிடுகின்றார்கள் என  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு,

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

திடீரென அதிகரிக்கப்பட்ட எரிவாயுவின் விலை - லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

வெகுவிரைவில் வெளிவரும் பிரதான சூத்திரதாரிகள்

நூல் வெளியீட்டு நிகழ்வுக்குப் பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடையத் தேவையில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல் | Masterminds Easter Sunday Attack Book Launch

"மக்களுக்காகவே எமது தோழர்கள் உயிர்நீத்தார்கள். 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் உரிமைகளுக்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

எமது போராட்டம் மனித குலத்துக்கு எதிரானதாக அமையவில்லை. நாங்கள் எந்தவொரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ எதிரானதல்ல, எமது ஜனநாயக போராட்டத்தை 1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டு எமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தது. அந்த போராட்டத்தில் உயிரிழந்த எமது தோழர்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்தார்கள்.

பாரிய போராட்டத்துக்கு பின்னர் ஜனநாயக ரீதியில் ஆட்சியமைத்துள்ளோம். நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.

வங்குரோத்து நிலை

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையாக செயற்பட வேண்டும். அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்.

இன்று தூய்மையானவர்களை போன்று ஊழலுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். ஒரு குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல் | Masterminds Easter Sunday Attack Book Launch

இதன் பின்னரும் அவர்கள் ஊழல் பற்றி பேசுவது ஆச்சியரியமாக உள்ளது. நடப்பு உலகளாவிய நிலைவரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அந்த மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

 எரிபொருள் அதிக விலைக்கு விற்பனை

நெருக்கடி நிலைமையின் போது எரிபொருளைப் பதுக்கி வைத்து அவற்றை அதிக விலைக்கு விற்றுப் பயனடைய வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல் | Masterminds Easter Sunday Attack Book Launch

நாடு என்ற ரீதியில் மாற்றமடைய வேண்டுமாயின் தனிநபரின் செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்தையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியினர்தான் இன்று உள்ளார்கள். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறான எதிர்க்கட்சிகள் இல்லை.

நாட்டை அழித்தாவது ஆட்சியைக் கைப்பற்றவே நினைக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை தினசரி முன்வைக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அந்தப் பொய்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும், மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

இந்த மாதத்தில் அவர்களின் எண்ணம் நிறைவேறுமா என்பதை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள். மாறாக அரசாங்கத்தைப் பாதுகாக்கவே வீதிக்கு இறங்குவார்கள்.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது 

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதில் சுகபோகமாக வாழும் மனநிலை அரசாங்கத்தில் எவருக்கும் இல்லை. ஏனெனில் இது மக்களாட்சி அரசாங்கம். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள்.

நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடையத் தேவையில்லை. அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றால் நாங்கள் ஒருபோதும் பலவீனமடையமாட்டோம். ஏனெனில் பல ஆண்டுகாலமாக நாங்கள் இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆகவே விமர்சனங்களால் அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு பெற்றுக்கொடுப்போம்." - என்றார். 

புத்தாண்டில் QR முறையில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

புத்தாண்டில் QR முறையில் ஏற்படவுள்ள மாற்றம்! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US