நயினாதீவு வாள்வெட்டின் பிரதான சூத்திரதாரி கைது
யாழ்ப்பாணம் (Jaffna) நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வாள்வெட்டின் பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம்
அவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
