குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய திருத்தங்கள்
குற்றவியல் வழக்குகளை விரைவாக தீர்க்கும் நோக்கத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மனு பேரம் அல்லது மனு ஏற்பாட்டு விதிகள் (Plea bargaining or plea arrangement) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதங்களைக் குறைப்பது, சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பது மற்றும் வழக்குகளின் தேக்கநிலையைக் குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்கு இந்த யோசனைகள் உதவும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
பரிந்துரை
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதியும் அரசுத் தரப்பும் ஒரு ஒப்பந்தத்தில் நுழைய முடியும்.

அதேவேளை, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்குச் செல்வதற்குப் பதிலாக குற்றத்தை ஒப்புக்கொள்ளலாம்.
இதன் விளைவாக தண்டனையைக் குறைக்கவும் அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகையைக் குறைக்கவும் ஒரு பரிந்துரையைப் பெறக்கூடியதாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள்
மேலும், நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பதாகவே, இரண்டு தரப்பினரும் மனு உடன்பாடுகளில் நுழைய முடியும் என்றும் இந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளும் குற்றம் சாட்டப்பட்டவரால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டவுடன், தற்போதைய குற்றப்பத்திரிகைக்கு வழிவகுத்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் வேறு எந்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள மாட்டார் என்றும் இந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri