நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கோவிட் தொற்றால் மரணம்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சலாஹீதீன் ஹாஜி (சாபு) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
வவுனியாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவர், பட்டக்காடு மஸ்ஜிதுல் இலாஹிய்யா ஜீம்ஆ பள்ளி வாசல் தலைவரும், பட்டானிச்சூர் மன்பஉல் உலூம் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், வவுனியா பள்ளிவாசல் குழுவின் பொருளாளரும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் இணைப்பாளரும் ஆவார்.
குறித்த நபரின் சடலம் அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஒட்டமாவடிக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
