சம்பள முரண்பாடு தீர்க்கப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Government
By Kumar Jun 14, 2024 06:24 AM GMT
Report

அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி ரணில் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு (Colombo) வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் - 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி

சம்பள உயர்வு

மேலும் தெரிவிக்கையில், “நேற்று முன்தினம் (12) இலங்கை வரலாற்றிலே 101 கல்வி வலயங்களிலும் மிகவும் வெற்றிகரமாக அதிபர் ஆசிரியர்களின் சம்பள போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு மிக வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டது.

massive-strik-if-pay-dispute-is-not-resolved

கடந்த 27 வருடங்களாக அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் இருந்தது நாங்கள் 2001ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மூலமாக மூன்றில் ஒரு பகுதி சம்பளத்தை 2022ஆம் ஆண்டு பெற்றோம்

அதற்குப் பின்பு 2023 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் அதிபர்களுடைய சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சும் அதுபோல நிதி அமைச்சும் பல பொய்களை கூறியபோதும் எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் அதிபர் ஆசிரியர்களுடைய சம்பள உயர்வை இந்த அரசாங்கம் வழங்கும் என்று ஆனால் இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

கூலிப்படைகள்

பல போராட்டங்களை 2023 ஆம் ஆண்டு செய்திருந்தோம். அந்த ஜனநாயக நியாயமான போராட்டம் மீது ரணில் ராஜபக்ச அரசாங்கம் தடியடி கொண்டும் தண்ணீர் தாக்குதலும் ஆசிரியர் அதிபர்கள் மீது மேற்கொண்டார்கள்.

எனவே உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க கூறி நாங்கள் கேட்கின்றோம் இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி இன்று இல்லை நாங்கள் போராடுவது வெறுமனே அதிபர் ஆசிரியர்களது சம்பள உயர்வுக்காக மாத்திரமல்ல இலவச கல்வியை பாதுகாப்பதற்காகவும் தான் நாங்கள் போராடுகின்றோம்.

massive-strik-if-pay-dispute-is-not-resolved

எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் நாட்டில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்கள் இணைந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்துவார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் வெற்றி அளித்த இந்த போராட்டத்தை ஒரு சிலர் அரசாங்கத்திற்கு பின் நின்று கூலிப்படைகளாக செயல்படுகின்ற சிலர் அதிபர் ஆசிரியர்களை வேறு கோணத்தில் அல்லது வேறு பாதையில் திசை திருப்புகின்றார்கள்.

எனவே அதிபர் ஆசிரியர்களை இந்த கூலிப்படைகளை கண்டு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றும்  ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சித்திருந்தால் சிறந்த பயனை பெற்றிருக்கலாம் : இலங்கை ராஜதந்திரி

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சித்திருந்தால் சிறந்த பயனை பெற்றிருக்கலாம் : இலங்கை ராஜதந்திரி

கதிர்காமம் காட்டுப்பாதையை திறக்க யாத்திரிகர்கள் கோரிக்கை

கதிர்காமம் காட்டுப்பாதையை திறக்க யாத்திரிகர்கள் கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US