அரசாங்கமும் எதிர்க்கட்சியும் முயற்சித்திருந்தால் சிறந்த பயனை பெற்றிருக்கலாம் : இலங்கை ராஜதந்திரி
இலங்கையின் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து சர்வதேச கடன் வழங்குனரிடம் சென்றிருந்தால், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன், சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்க முடியும் என இலங்கை ராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின், ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் உள்ளகக் கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது வெளி அழுத்தங்களில் இருந்து முழுமையாக விடுபட முடியாத வகையில், நாட்டின் தலைவர்கள் நாட்டை நிர்வகித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்கள் ஆணையைக் கொண்ட ஒரு தலைவர்
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜயதிலக, இலங்கைக்கு மக்கள் ஆணையைக் கொண்ட ஒரு தலைவர் தெரிவு செய்யப்படவேண்டும்.
அத்துடன் நாட்டை முன்னோக்கிச் செல்வதற்கு தலைமுறை தலைமைத்துவ மாற்றம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |