புதிய சட்டமூலத்தை தோற்கடிக்க பெரும் போராட்டங்கள் வெடிக்கும்! வசந்த முதலிகே பகிரங்க எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Protest
By Rakesh Oct 25, 2026 04:16 PM GMT
Report

"மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தக்கூடிய நிலை உருவாகக்கூடாது. எனவே, புதிய சட்டமூலத்துக்கு எதிராக நாம் முழுமையான போராட்டத்தை முன்னெடுப்போம். இந்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதே எமது நோக்கமாகும்" - என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும் போராட்டங்கள் 

அவர் மேலும் கூறுகையில்,

"தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்வதாக உறுதியளித்திருந்தது.

புதிய சட்டமூலத்தை தோற்கடிக்க பெரும் போராட்டங்கள் வெடிக்கும்! வசந்த முதலிகே பகிரங்க எச்சரிக்கை | Massive Protests Will Erupt To Defeat The New Bill

இருப்பினும், தற்போது 'அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல்' என்ற பெயரில் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவந்து, அரசிடம் கோரிக்கைகளை முன்வைப்பதையும் அதற்கு அழுத்தம் கொடுப்பதையும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்த முற்படுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

1979 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னரான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 'அரகலய' போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அடக்குமுறைகளும் அதே அதிகாரங்களுடன் வேறு வடிவத்தில் மீண்டும் கொண்டுவரப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குள் ஜே.ஆர். ஜயவர்தனவும் ரணில் விக்ரமசிங்கவும் வந்துவிட்டார்களா? ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு தற்போது மக்களின் குரலை அடக்க முயல்கின்றது.

 பொய்க் குற்றச்சாட்டு

அத்துடன், 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கான சட்டமூலம்' என்ற பெயரில் பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது நாட்டில் பெரும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

இலங்கைப் பொலிஸார் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளும் கசப்பான அனுபவங்களும் மக்கள் மத்தியில் இருக்கும் வேளையில், பொலிஸாரின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துவது சாதாரண மக்களையும் போராட்டக்காரர்களையும் பொய்க் குற்றச்சாட்டுகளில் சிக்க வைப்பதற்கே வழிவகுக்கும்.

புதிய சட்டமூலத்தை தோற்கடிக்க பெரும் போராட்டங்கள் வெடிக்கும்! வசந்த முதலிகே பகிரங்க எச்சரிக்கை | Massive Protests Will Erupt To Defeat The New Bill

எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரச நிறுவனங்கள் மூடப்படும்போதும், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு வரும்போதும் அரசுக்கு எதிராக எழும் மக்கள் அலையை அடக்குவதற்கே இத்தகைய சட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன.

எனவே, மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் போது அவர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த ஜனநாயக விரோதச் சட்டமூலத்தை முற்றாகத் தோற்கடிக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என குறிப்பிட்டார்.

N9P

50 குற்றச்சாட்டுகள் - அரசுக்கு எதிராக ஆதாரங்களுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்!

50 குற்றச்சாட்டுகள் - அரசுக்கு எதிராக ஆதாரங்களுடன் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்!

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US