ஆயுதப் போராட்டம் வெடிக்கும் சாத்தியம்: அடித்தளத்தை தயார் செய்யப்போகும் அரசியல் முக்கியஸ்தர்..!
நாட்டின் இன்றைய நிலையில் ஆயுதப் போராட்டம் நடக்கும் எனவும், அந்தப் போராட்டத்திற்கான அடித்தளத்தை தான் தயார் செய்வதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜனாதிபதி தலைமைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்கொண்டு மக்கள் போராட்டத்திற்கான ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளது.
முறையான தலைமை இல்லாத காரணத்தினால் கடந்த முறை அரசாங்கத்தால் போராட்டத்தை அடக்க முடிந்தது.
ஆனால் இம்முறை அப்படி நடக்காமல் இருக்க எனது நேரத்தையும், உழைப்பையும், செல்வத்தையும் செலவழித்து போராட்டத்திற்கான அடித்தளத்தை தயார் செய்யவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
