சிறிலங்கன் விமான சேவைக்கு பாரிய நட்டம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், உலகளாவிய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நீண்டகால நிதி நெருக்கடிகள் காரணமாக சிறிலங்கன் விமான சேவை கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நிதி அமைச்சின் அரையாண்டு நிதி நிலைமை அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் சிறிலங்கன் விமான சேவை வரிக்கு முந்திய நிலையில், 35.6 பில்லியன் ரூபாய் நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் விமான சேவையின் வருமானம் 82.8 பில்லியனாக அதிகரித்த போதிலும், செலவினம் 40.4 சதவீதத்தால் அதிகரித்து 95.2 பில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது.
விமான எரிபொருள் செலவு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமையால் விமான எரிபொருள் செலவு 93 சதவீதத்தால் அதிகரித்தமையே செலவின உயர்வுக்கான பிரதான காரணமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் தொடர்பான அழுத்தங்களும் விமான சேவையின் நிதி நிலைமையை மேலும் பாதித்துள்ளன.

விமான சேவையின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கமும் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
175 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 126.5 மில்லியன் டொலர் வங்கிக் கடப்பாடு மார்ச் 20ஆம் திகதி அரசாங்கத்தின் கடன் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி
மேலும், விமான சேவையின் குறுகியகால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கன் விமான சேவையின் நிதி நெருக்கடி தற்போதைய ஒன்றல்ல. 2008ஆம் ஆண்டு அரசாங்கம் விமான சேவையின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றபோது, அது 4,899 மில்லியன் இலாபத்தைப் பதிவு செய்திருந்தது.
எனினும், அதன் பின்னர் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் நட்டத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் ரூ. 163,583 மில்லியன் நட்டம் பதிவாகியுள்ளதுடன், இதுவரையான ஒட்டுமொத்த நட்டம் 630 பில்லியனைத் தாண்டியுள்ளது.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri