தலவாக்கலையில் பாரிய மண்சரிவு(Video)
மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் வெள்ள நீராலும், மண்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தலவாக்கலை பகுதியில் பெய்து வந்த அடை மழை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்க்குட்பட்ட தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள மண்மேடு இன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, பாடசாலைக்கான வாகன தரிப்பிடம், நீர் தாங்கி என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.
கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை
மேலும் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த கார்
ஒன்றும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.
மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இப் பகுதியில் இருப்பதனால் அருகாமையில் உள்ள வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பாதிப்பை தவிர்த்துக்கொள்ள கூடியதாக இருந்ததாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் இறுதி தீர்மானம்
மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிபர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.









