நாட்டின் பண வீக்கம் பாரியளவில் அதிகரிப்பு
நாட்டின் பண வீக்கம் பாரியளவில அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் வருடாந்த மாற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் பணவீக்கம் ஒக்ரோபர் மாதம் 8.3 வீதமாகவும், நவம்பர் மாதம் 11.1 வீதமாகவும் அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் உணவுப் பொருள் அல்லாதவற்றுக்கு மாதாந்தம் ஏற்பட்ட விலை அதிகரிப்பே இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்தமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் மரக்கறி வகைகள், பால் மா, பெரிய வெங்காயம், மீன், கோழி இறைச்சி போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
மதுபான வகைகள், புகையிலை உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையிகளினால் நவம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்



