சீரற்ற காலநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் சில பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை
அத்தனகலு ஓயா பெருக்கெடுத்த காரணத்தால், துனமலே பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எஸ். பி. சி. சுஷீஷ்வர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு
இது தொடர்பில் மேலும் கூறுகையில், அத்தனகலு ஓயா பெருககெடுப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாயம் தொடர்கிறது.
திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்லை, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா அல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பிரதேசங்களில் இந்த வெள்ள நிலைமை தொடர்கிறது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மேலும் சற்று அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 9 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
