ரியாத்- அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் பாரிய தீப்பற்றல்
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சவூதி அரம்கோ நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில் நேற்றையதினம்(03.10.2026) பாரிய தீப்பற்றலும் அடர்ந்த புகையும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீவிபத்து தொடர்பாக சவூதி அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து உடனடி உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இது குறித்த கருத்து கோரிக்கைகளுக்கு அரம்கோ நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
மோதல்கள்
சவூதி அரேபியாவிற்கும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இத்தீவிபத்திற்கு இதுவரை எந்தவொரு தரப்பும் உரிமை கோரவில்லை. கடந்த வாரம் யான்பு (Yanbu) பகுதியில் உள்ள அரம்கோ மையங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகள் தெரிவித்திருந்த போதிலும், சவூதி அரேபியா அத்தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.