ஹொங்கொங் தீ விபத்து.. ஆயிரக்கணக்கானோரின் பரிதாப நிலை!
புதிய இணைப்பு
ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தது 27 பேர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பாரிய தீயினால் அங்கு வசித்து வந்த பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஹொங்கொங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் ஒருவர் தீயணைப்பு வீரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் முயற்சி
முன்னதாக, கட்டிடங்களில் மக்கள் சிக்கியிருப்பதாக கூறப்பட்ட போதிலும், மேலும் யாராவது உள்ளே இருக்கிறார்களா என தெரியவில்லை எனவும் ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டடத்துக்கு வெளியே உள்ள மூங்கில் மரங்களிலும் தீ பரவி வருகின்றது.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri