இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம்! 3ஆவது முறையாக ரத்து - வெளியான காரணம்..
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
பெஞ்சமின் நெதன்யாகு
டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பெஞ்சமின் நெதன்யாகு கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய திகதியை கோருவார் எனத் தெரிகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3ஆவது முறையாகும்.
பிரதமர் மோடி
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri