359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்றையதினம்(02) மருத்துவ பரிசோதனைகளுக்காக சட்டவைத்திய அதிகாரியிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஈஸ்டர் தாக்குதல் குறித்தும் பிள்ளையான் பல வாக்குமூலங்களை வழங்கிவருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் பேசுகின்றது லங்காசிறியின் News Insight தமிழ் நிகழ்ச்சி...