பிரஸ்ஸல்ஸ் கட்டுமானப் பணியிடத்தில் பயங்கரத் தீ விபத்து: பலர் உயிரிழப்பு; 6 பேரைத் தேடும் பணி தீவிரம்
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பெரிய கட்டிட மறுசீரமைப்பு கட்டுமானப் பணியிடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் இரண்டு மின்தூக்கிகளில் ஒன்றில், உயிரிழந்த இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொழிலாளர் ஆய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ப்ரெக்ட் ஸ்பெய்ப்ரூக் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்கான காரணம்
இந்த விபத்து நேரிட்டபோது கட்டுமானப் பணியிடத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அங்கு பணிபுரிந்த 6 தொழிலாளர்களைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
கட்டிடத்தின் கீழ் தளங்களில் முதலில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், மின்தூக்கிப் பாதைகள் வழியாகப் பரவிய தீப்பிழம்புகள் கட்டிடத்தின் நிலத்தடித் தளத்திலும் புதிய தீ விபத்தை ஏற்படுத்தியதால் மீட்புப் பணியில் சவாலான சூழல் நிலவியதாக பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.