புதுக்குடியிருப்பு பாடசாலையில் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்

Sri Lanka Police Mullaitivu schools
By Shan Jul 14, 2026 11:13 PM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை எதிர்வரும் 21.07.2026ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 13.07.2026ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்தில், உயர்தரத்தில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள், பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த மற்றொரு வகுப்பறைக்குள் இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

அசோவ் கடலில் உக்ரைன் தாக்குதல்: பயங்கரவாதம் என ரஷ்யா கடும் குற்றச்சாட்டு

மேலதிக சிகிச்சை

அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு பாடசாலையில் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் | Students Been Attacked In Mullaitivu Famous School

சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்து, இன்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். 

இன்னும் சில மாதங்களில்.. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரச தரப்பு உறுதி

இன்னும் சில மாதங்களில்.. மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரச தரப்பு உறுதி

சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி

சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US