கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலியின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைக்குச் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்
இதற்கான அனுமதியை கொழும்பு கோட்டை நீதிவான் அனுமதியளித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி இன்று வெள்ளிக்கிழமை (25) மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவரை டிசம்பர் 8 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலையாகவும் எக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலி 250 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
