கம்போடியாவில் வெடிமருந்து தளத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்: பலர் பலி
தென்மேற்கு கம்போடியாவில் (Cambodia) வெடிமருந்து தளம் வெடித்துள்ளதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் (Hun Manet) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த வெடிப்புச் சம்பவம் நேற்று (27.04.2024) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
வெப்ப அலை
இந்த வெடிப்பு சம்பவத்தின்போது நான்கு கட்டடங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளதோடு கிராம மக்களின் 25 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைப் போலவே கம்போடியா வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெப்பநிலையா இந்த வெடிப்புக்கு காரணம் என்பது தெரியவரவில்லை.
மேலும், பிற்பகல் 2:30 மணியளவில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதைத் தொடர்ந்து சிறிய குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
