பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கப்போகும் இலங்கை! வஜிர அபேவர்தன
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியாக நாட்டை சரியாக கையாளவில்லை என்பதால், தற்போது, அதிகளவான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் வினைதிறனற்ற செயற்பாடுகள் காரணமாக நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் நாடு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகி, மக்கள் கடும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
வரலாற்றில், வினைதிறனற்ற, பலவீனமான அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடு பொருளாதார ரீதியாக அழிவை சந்தித்தது. அப்படியான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை மீண்டும் கட்டியெழுப்பியது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
