பல துறைகளில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - புலம்பெயர் அமைப்பு தகவல்
இலங்கை அரசாங்கம் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள மக்களை பார்த்து பயப்படுகின்றது. இவை நாம் எதிர்பார்த்த விடயமாகவே காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய பிரித்தானியாவின் தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா (Sudha) தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக சர்வதேச தளங்களில் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இவை இலங்கை அரசுக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளது.இந்த விடயங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறு பாரிய நெருக்கடியாக மாறும் என்பதை மிக கவனமாக அவதானித்து வருகின்றனர்.
எனவே இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள அமைப்புக்களை பல வழிகளில் சந்திக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.