பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் - செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரச பாதுகாப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PSTA) மற்றும் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டும் என சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்றைய தினம் (19.11.2026) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.
சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் வைத்தல்
முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் வரை பொலிஸ் காவலில் வைக்க அனுமதிப்பது குறித்து செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கவலை வெளியிட்டார்.
சட்டங்களை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு
இதற்கிடையில், சட்டத்தரணி திஸ்ஸ வீரகொட, சட்டமூலங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே விரிவான மக்கள் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam