மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தெரிவில் குழப்ப நிலை

Local government Election Local government election Sri Lanka 2025
By Thirumal Jun 28, 2025 12:00 AM GMT
Report

மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் நடைபெற்றது.

சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது.

தலைவர் தெரிவு

இதில் சுயேட்சை குழு சார்பாக கந்தையா ராஜ்குமார், தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆசிர்வாதம் எலிஸ்டன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தேசிய மக்கள் சக்தியில் அந்த சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் தமது தரப்பில் பெயரிடப்பட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஆணையாளரிடம் கோரினர்.

அதற்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் தலைவர் தெரிவிக்கான வாக்கெடுப்பை திறந்த முறையில் நடத்துமாறு கோரினர்.

இரு தரப்பிலும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையை கருத்தில் கொண்டு மத்திய மாகாண ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து, இந்த நிலைமையை விசேடமானதாக கருதி இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானித்தார்.

இதன்போது வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் அறிவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில், திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு 10 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு திறந்த முறையில் நடத்தப்பட்டது. இதில் 09 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆசிர்வாதம் எலிஸ்டன் 08 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பரமசிவம் ராஜ்குமார் பெயர் முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஸ்கெலியா பிரதேச சபை (உறுப்பினர்கள் 17)

• தேசிய மக்கள் சக்தி - 07

• ஐக்கிய மக்கள் சக்தி- 06

• சுயேட்சை குழு (01) – 02

• ஐக்கிய தேசியக் கட்சி - 02

GalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US