இரண்டு பிள்ளைகளை படுகொலை செய்த தந்தை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை இன்று(28.03.2024) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் வழங்கியுள்ளார்.
மேலும், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
ஆராயப்பட்ட விண்ணப்பங்கள்
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் தந்தையால் படுகொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் வழக்கு தொடர்பில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணி ஆகியோரின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 63 வயதுடைய சம்பவத்தில் மரணமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹம்மது மிர்சா முகமது கலீல் என்பவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri