வடக்கு மாகாணத சுகாதாரத்துறையில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள்! அர்ச்சுனா ஆதங்கம்
வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண தாதிய உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய (13.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்றைய தினம் (12) தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் தொடருமாக இருந்தால் வடக்கு மாகாணத்திலுள்ள பொது மக்கள் மிகப்பெரிய பிரச்சினைக்கு உள்ளாகுவார்கள். அதைத்தவிர வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத்துறையில் சில விடயங்களை செய்திருக்கின்றார்கள்.
முக்கியமாக சகல உத்தியோகத்தர்களையும் ஒரு புத்தகத்தில் கையொப்பமிடும் ஒரு முடிவெடுத்துள்ளார்கள். தயவுசெய்து வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற அந்த உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகளை அழைத்துவந்து சுகாதார அமைச்சில் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்க்கவும்.” என தெரிவித்தார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam