வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி நடைபெற்ற திருமணம்
வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றமையால் திருமண மண்டபம் சுகாதாரப் பிரிவினரால் இன்று மாலை சீல் வைத்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன்போது சுகாதார அறிவுறுத்தல்களை மீறி அதிகளவிலான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கு கூடியிருந்தவர்களை கடும் எச்சரிக்கை வழங்கி அங்கிருந்து வெளியேற்றியதுடன், திருமண வீட்டாருக்கும் கடும் எச்சரிக்கை வழங்கியுள்ளனர்.
சுகாதார அறிவுறத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கி மக்களை ஒன்று கூட்டியமை தொடர்பில் திருமண மண்டபம் சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டு மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
