யாழில் மக்களின் நிதிப் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட சந்தை தொகுதி
யாழ்ப்பாணம்- நெல்லியடி பகுதியில் மக்களின் நிதிப்பங்களிப்புடன், பிரதேச சபையும் இணைந்து சந்தை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (20) சபைச் செயலர் க.கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபையின் 4 மில்லியன் ரூபா நிதியும், மக்களின் நன்கொடையான 27 மில்லியன் ரூபாவுமாக 31 மில்லியன் ரூபாவில் சந்தை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
சந்தை தொகுதி
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,தலைமைத்துவமும், மக்களின் பங்களிப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தச் சந்தை மிகச் சிறந்த உதாரணம்.
சொன்னதை செய்பவர்கள், சொன்னதையும் செய்யாதவர்கள், மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் இந்தச் சபையின் செயலர் ஏற்கனவே வேறு பல விடயங்களிலும் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றார்.
அபிவிருத்திப்பணி
மக்களின் நிதிப் பங்களிப்புடன் பிரதேச சபையும் இணைந்து இவ்வாறு சந்தை ஒன்றை அமைத்திருக்கும் செயற்பாடு இலங்கையில் வேறு எங்கும் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்த மக்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டிருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இதை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய இடங்களில் இவ்வாறான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
